ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி நடவடிக்கைகள் தொடர்பாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாகவும் கிழக்கு மாகாண மக்களின் கருத்துகளை அறிவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் கட்சியின் கட்டாய உயர்பீட உறுப்பினர்கள் கொண்ட விசேட குழு ஒன்றினை நியமனம் செய்துள்ளார்.
இக்குழுவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர்,பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல், முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம், கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும், சட்டத்தரணிமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
முதற்கட்டமாக இக்குழுவினர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.
No comments:
Post a Comment