பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். அது தொடர்பான வேட்புமனுவில் அவர் இன்று (11) விஜேராமவிலுள்ள இல்லத்தில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன நிதஹஸ் சந்தானய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015 பொதுத் தேர்தலிலும் அவர் குருணாகல் மாவட்டத்திலிருந்தே பாராளுமன்றத்திற்கு தெரிவானார். இதன்போது அவருக்கு 423,529 விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளாக ரணில் விக்ரமசிங்க 500,566 வாக்குகளை கொழும்பில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment