பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்

பிணைமுறி மோசடி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த ரிட் மனுவை (writ petition) விசாரணை செய்ய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுக்கள் தொடர்பில் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு, சட்ட மா அதிபரினால் விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கையை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மனுக்களை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, ஷிரான் குணரத்ன ஆகிய மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தம் மீது விதிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை இடைநிறுத்தக் கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மனுக்களை இன்று (11) ஆராய, மேன்முறையீட்டு நீதிமன்ற நேற்றையதினம் (10) மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான பிடியாணைக்கு எதிராக, முன்னாள் எம்.பி. ரவி கருணாநாயக்க, பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கி அதிகாரியான சங்கரப்பிள்ளை பத்மநாதன் மற்றும் அவரது சட்டத்தரணியான சமன் குமார ஆகியோரர் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment