மட்டக்களப்பில் முதலாவது சுயேட்சைக் குழு வேட்பு மனுவை தாக்கல் செய்தது - News View

Breaking

Post Top Ad

Friday, March 13, 2020

மட்டக்களப்பில் முதலாவது சுயேட்சைக் குழு வேட்பு மனுவை தாக்கல் செய்தது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட சுயேட்சைக் குழு இன்று (13.03.2020) நியமனப் பத்திரம் தாக்கல் செய்து.

இன்று நன்பகல் முதலாவது சுயேட்சைக்குழு நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரத்தை புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேற்சைக் குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முதலாவது நியமனப் பத்திரத்தை தெரிவு அத்தாட்சி அலுவலர் திருமதி கலாமதி பத்மராஜா, உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு நியமனப் பத்திரத்தை கையேற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் 19.03.2020 நண்பகளுடன் நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் காலம் நிறைவடையவுள்ளது.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment

Post Bottom Ad