வியட்நாம் உணவகத்தில் கொரோனா வைரஸ் வடிவில் பர்கர் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 26, 2020

வியட்நாம் உணவகத்தில் கொரோனா வைரஸ் வடிவில் பர்கர்

கொரோனா வைரஸ் அச்சத்தை போக்க வியட்நாமில் ஒரு உணவகத்தில் கொரோனா வைரஸ் வடிவ பர்கர்கள் விற்பனை செய்யப்படுகிறது. 

வியட்நாமின் தலைநகர் ஹனோயிலுள்ள உணவக சமையற்காரர் கொரோனா வைரஸை கருப்பொருளாக வைத்து பர்கர்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் மன உறுதியை அதிகரிக்க முயற்சித்து வருகிறார். 

“நீங்கள் அதை சாப்பிட வேண்டும், அதை வெல்ல வேண்டும்“ என்பது இவரின் தத்துவமாகும். இந்த உணவகம் ஒரு நாளைக்கு சுமார் 50 பர்கர்களை விற்பனை செய்கிறது. 

வியட்நாமில் அதிகரித்து வரும் வணிகங்கள் இருந்தபோதிலும், வைரஸ் காரணமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பெப்ரவரி நடுப்பகுதியில், வியட்நாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 16 பேர் இனங்காணப்பட்டனர். ஆனால் வெளிநாட்டு பயணிகள் வருகை மற்றும் திரும்பி வந்த வியட்நாமிய குடிமக்களால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

வியட்நாமில் தற்போது வரை 148 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள். ஆனால் இறப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment