கொழும்பு பிரதேசத்தில் உள்ள வரிய குடும்பங்களுக்கு களத்தில் நின்று உதவினார் ஜனகன்...! - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 24, 2020

கொழும்பு பிரதேசத்தில் உள்ள வரிய குடும்பங்களுக்கு களத்தில் நின்று உதவினார் ஜனகன்...!

(றிஸ்கான் முகம்மட்)

கொரோனா (Covid - 19) காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு நாட்கூலி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஜனனம் Foundation மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

கொழும்பு பிரதேசங்களில் (தெஹிவளை, வெள்ளவத்தை, மட்டக்குளிய) வாழும் சுமார் 600 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.

அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் திரு.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் முன்னெடுப்பில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் குருசுவாமி தலைமையில், தற்போதைய கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் திரு பால சுரேஷ், திருமதி மஞ்சுளா, திரு விஷ்ணுகாந்த் மற்றும் ஜனனம் Foundationஇன் அலுவலக உறுப்பினர்களின் உதவியுடன் வெற்றிகரமாக உலர் உணவுப் பொதிகள் 600 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நடவடிக்கையை அடுத்து வரும் தினங்களிலிலும் தொடரும்படி தலைவர் மனோ கணேசன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad