அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 25, 2020

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

இராஜதுரை ஹஷான் 

தற்போதைய நிலையில் பல பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். 

ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ள காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் கிராம சேவகர் பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 

நிவாரண பொருட்களை நாடு தழுவிய ரீதியில் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் தெரிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும், கிராம சேவகர் பிரிவு ஊடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்

No comments:

Post a Comment

Post Bottom Ad