பயணிகள் விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்குள் நுழையத் தடை - News View

About Us

About Us

Breaking

Sunday, March 22, 2020

பயணிகள் விமானங்கள், கப்பல்கள் இலங்கைக்குள் நுழையத் தடை

அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் இத்தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment