வத்திக்கானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நபர் ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார். வத்திக்கான் பேச்சாளர் மட்டியோ புரூனி இதனை உறுதி செய்துள்ளார்.
வத்திக்கானின் சுகாதார சேவையிலுள்ள நோயாளி ஒருவருக்கு வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானின் சுகாதார நிலையங்களில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டு சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்டவர் வத்திக்கானின் பணியாளரா அல்லது மதகுருவா அல்லது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவரா என்பது குறித்து பேச்சாளர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இத்தாலியுடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பரிசுத்த பாப்பரசரின் வாராந்த மக்கள் சந்திப்புகள் இரத்தாகலாம் என ஊடகங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை வத்திக்கான் பணியாளர் ஒருவர் கொரோன வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட பணியாளர் பிரான்சிஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மதகுருவொருவரை சந்தித்திருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment