வெள்ளவத்தைக்கும் பத்தரமுல்லைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் படகுச் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி சபை தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி.சொய்சா தெரிவித்தார்.
இதற்காக 04 படகுகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இச்சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய கட்டணமாக 60 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு ஒன்றில் 16 பயணிகள் வரையில் பயணிக்க முடியும் எனவும் படகுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment