கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர் - News View

Breaking

Post Top Ad

Thursday, March 26, 2020

கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம் - புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நபர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்தவர் எனவும், சுவிட்சர்லாந்தின் புனித கலன் (Saint Gallen) பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேர்லினில் உள்ள இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (25) இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுவிஸில் இதுவரை சுமார் 11,712 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 192 பேர் அந்நாட்டில் மரணமடைந்துள்ளனர். ஆயினும் அங்கு 131 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad