விஷ புகையை சுவாசித்த 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

விஷ புகையை சுவாசித்த 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வாரியாபொலவில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் விஷ காற்றை சுவாசித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள குப்பைகள் இடும் பகுதியில் ஏற்பட்ட தீயிலிருந்து வந்த புகையை சுவாசித்த மாணவர்கள் இவ்வாறு அசாதாரண நிலைக்கு ஆளாகியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

இம்மாணவர்களுக்கு சோர்வு, கண்ணில் அரிப்பு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த மாணவர்கள் வாரியபொல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment