கடலில் கடத்த முயன்ற 485 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை மீட்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 15, 2020

கடலில் கடத்த முயன்ற 485 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை மீட்பு

நேற்று (14) வடக்கு கடல்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தேடல் நடவடிக்கைகளின் போது, 485 கிலோ கிராம் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டின் கடந்த 75 நாட்களில் கடலிலும் நிலத்திலும் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளால் சுமார் 02 டொன் கேரள கஞ்சாவை இலங்கை கடற்படைக்கு இதுவரை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், நேற்று மணல்காடு கடல் பகுதியில் நடந்திய தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கியை தடுத்து 02 சந்தேக நபர்களை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளனர்.
இதேபோல், இலங்கை கடலோர காவல்படை மற்றும் சங்கானை கலால் நிலைய அதிகாரிகள் மரதன்கேனியின் கடல் பகுதியில் கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில், கடற்கரையில் ஒரு சந்தேகத்திற்கிடமான டிங்கியைக் கண்டுபிடித்தனர். இதுபோன்று, இந்த இரண்டு நடவடிக்கைகளின் போது சுமார் 485 கிலோ கிராம் கேரள கஞ்சா, 02 சந்தேக நபர்கள் மற்றும் 02 டிங்கிகள் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 30 மற்றும் 34 வயதுடைக பேசாலை மற்றும் மன்னார் பகுதியல் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் கங்கேசன்துரை பொலிசார் இந்த சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் கடுமையான கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, கடற்படையினால் பல போதைப்பொருள் கடத்தல்காரர்களை நீதிக்கு கொண்டு வர முடிந்தது.

அதன்படி, கடந்த 75 நாட்களில் வடக்கு கடற்படை கட்டளையில் இருந்து 1682 கிலோ கிராமும், வடமேற்கு கடற்படை கட்டளையிலிருந்து 181 கிலோ, தெற்கு கடற்படை கட்டளையிலிருந்து 19 கிலோ, வட மத்திய கடற்படை கட்டளையிலிருந்து 21 கிலோ மற்றும் மீதமுள்ள கடற்படை கட்டளைகளிலிருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு மட்டும் 1913 கிலோ கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக 69 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment