கொரோனாவுக்கு தீர்வு தருமா அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி? : 43 வயதான பெண்மணிக்கு முதல் பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 17, 2020

கொரோனாவுக்கு தீர்வு தருமா அமெரிக்க பரிசோதனை தடுப்பூசி? : 43 வயதான பெண்மணிக்கு முதல் பரிசோதனை

கொரோனா வைரஸுக்கான சோதனை தடுப்பு மருந்து அமெரிக்க ஆய்வாளர்களால் கடந்த திங்கட்கிழமை நான்கு பேருக்கு முதல் முறை செலுத்தப்பட்டதாக கெய்சர் பெர்மனன்ட் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்து கொவிட்-19 நோய்த் தொற்றை ஏற்படுத்தும் வைரஸில் இருந்து நகலெடுக்கப்பட்ட பாதகமில்லாத மரபணு குறியீட்டைக் கொண்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து அல்லது ஆய்வுக்கு உட்பட்டு வரும் ஏனைய மருந்துகள் செயற்படுவது குறித்து அறிந்துகொள்ள இன்னும் பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் முதல் நபராக சியாட்டலைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு வயது குழந்தையின் தாய் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார். “ஏதாவது செய்வதற்கு எனக்கு இது அற்புதமான சந்தர்ப்பமாக இருந்தது” என்று ஜெனிபர் சலர் ஏ.பீ செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

வைரஸ் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் வேகமாக இயங்கி வருகின்றனர்.

விலங்குகளுக்கு நோய் குணமடையும் வாய்ப்பு பற்றி சோதிக்கப்பட்ட பின்னரே முதல் முறை தடுப்பு மருந்து மனிதனிடம் சோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 18 முதல் 55 வயதுள்ள மொத்தம் 45 பேருக்கு தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. 45 பேரிடமும் மொத்தம் 6 வாரங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment