இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினை புரட்டி எடுக்கும் கொரோனா - 120 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, March 13, 2020

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினை புரட்டி எடுக்கும் கொரோனா - 120 பேர் பலி

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. 

உலகம் முழுவதும் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 ஆயிரத்து 113 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்தாலியை தொடர்ந்து ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 209 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment