சீனாவின் கொரோனா தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

சீனாவின் கொரோனா தாக்கத்தால் உணவு விநியோகத்தில் மாற்றம்

சீனாவில் துரித உணவு நிறுவனங்கள் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ‘தொடர்பு இல்லாத’ உணவு விநியோகத்தை அதிகரிக்கின்றன. 

சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் துரித உணவு விற்பனை நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க “தொடர்பு இல்லாத” உணவு விநியோக சேவைகளை (pickup and delivery) அதிகரித்து வருகின்றன. 

மெக்டொனால்ட் சீனா முழுவதும் தொடர்பு இல்லாத உணவு விநியோக சேவைகளை பிக் மாக்ஸ், ப்ரைஸ் மற்றும் பிற உணவு பட்டியலுக்கு வழங்கியுள்ளது. 

இதில், வாடிக்கையாளர்கள் தொலைவிலிருந்து கைத்தொலைபேசிகளின் மூலமோ அல்லது உணவகத்திலுள்ள கணினிகள் மூலமோ முன்பதிவு செய்கிறார்கள். 

அத்தோடு ஊழியர்கள் உணவை பைகளில் மூடி, மனித தொடர்பு இல்லாமல் எடுப்பதற்கு ஒரு சிறப்பு இடத்தில் வைக்கிறார்கள், என மெக்டொனால்ட் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது. 

இணையத்தளத்தில் உணவிற்காக முன்பதிவு செய்வோர் தொடர்பு கொள்வதற்காக உணவகத்திற்கு வெளியே நுழைவாயிலில் ஒரு அட்டவணை அமைக்கப்பட்டு உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுள்ளன. 

அங்கு உணவு விநியோகப் பைகள் கிருமி நீக்கம் செய்யப்படுவதோடு ஊழியர்கள் அடிக்கடி தங்கள் கைகளைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள். 

வாடிக்கையாளர்கள் அடையாள அட்டைகளை எடுத்துச் சென்று அவர்கள் தங்கள் உணவை தயாரித்து பேக்கேஜ் செய்தவர்களுக்கு காய்ச்சல் இல்லை என்பதை நிரூபிக்க அவர்களின் உடல் வெப்பநிலை ஸ்கேன் செய்யப்படுகிறது. 

உலகளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 71,334 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1,775 ஆக பதிவாகியுள்ளது. 

இம்மாத ஆரம்பத்தில், பீஜிங்கை தளமாகக் கொண்ட பிக்ஒன் லேப் இன் தரவின்படி, மீட்டுவான்-டயான்பிங் விநியோகதளத்திலுள்ள கடைகளில் 83 வீதமான கடைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad