கொரோனா வைரஸ் தொற்றிய சந்தேகத்தில் தந்தை தனிமைப்படுத்தப்பட்டதால், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது 16 வயது மகன் கவனிப்பாரற்று உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இரு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தனது தந்தை மற்றும் சகோதரர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 16 வயது யான் செங் என்ற சிறுவன் ஒரு வராத்தின் பின் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.
இந்தக் காலப்பிரிவில் அந்த சிறுவனுக்கு இரு முறை மாத்திரமே உணவு ஊட்டப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளூர் கம்யூனிச கட்சி செயலாளர் மற்றும் ஹீவாஜா நகர மேயர் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறுவன் மரணம் சமூக ஊடகம் இணையதளங்களில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப் பகுதியாக உள்ள ஹுபெய் மாகாணத்தில் இந்த குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.
தனது மகன் தனித்து விடப்பட்டிருப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் அவரது தந்தை சீன சமூக ஊடகமான வெய்போவில், மகனைப் பராமரிக்குமாறு உதவி வேண்டி பதிவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment