நான்கு மாதங்களாக விளக்கமறியலில் இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

நான்கு மாதங்களாக விளக்கமறியலில் இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றினால் இன்றையதினம் (05) இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெனாண்டோ ஆகிய இருவருக்கும் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும், தலா ரூபா 250,000 ரொக்கம் மற்றும் தலா ரூபா 25 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெனாண்டோ ஆகியோர் கடந்த வருடம் ஜூலை மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஜூலை 09ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், சட்ட மா அதிபரினால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு விசாரணைக்கமைய, குறித்த இருவரும் கடந்த ஒக்டோபர் 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment