ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாராவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (05) முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ரஞ்சித் மத்தும பண்டாரவின் நியமனத்திற்கு ஒருமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அதிகாரத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதென எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment