(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீடத்தில் மாணவர்கள் கெளரவிப்பும், சின்னம் சூட்டும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (31) கலாபீட மைதானத்தில் நடைபெற்றது.
கலாபீட அதிபர் ஏ.ஹபீப் காஸிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் ஆகியோர்களுக்கு பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அத்தோடு மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைக்கப்பட்டதோடு, கல்லூரி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க மாணவர்கள் பலருக்கு ஒவ்வொரு துறைகளிலும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக காவத்தமுனை விஷேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி கலந்து கொண்டு உரையாற்றினார்.
மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment