எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்கிழமை இன்று இலங்கை குடியரசின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
அதன் நிகழ்வாக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச சபை, விளையாட்டு கழகங்கள், வாழைச்சேனை வர்த்தக சங்கங்கள் மற்றும் வாழைச்சேனை பிரதேச ஆலயங்கள் என்பனவற்றில் சுதந்திர தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச சபையில் தவிசாளர் ஐ.டீ. அமிஸ்டிம் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர, பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது மதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதுடன், கலந்து கொண்டவர்களுக்கு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் விளையாட்டு கழகங்களினால் குளிர் பானங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment