எஸ்.எம்.எம்.முர்ஷித்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பபு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிகளிலும் அரச திணைக்களங்கள் மற்றும் பொது அமைப்பிக்களினாலும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இதன் அடிப்படையில் வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேச சபை முன்றலில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் செயலாளர் திருமதி.லிங்கேஸ்வரன் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment