கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப இடமான சீனவின் வுஹான் நகரில் ஜிம்னாசியம், கண்காட்சி மையம் மற்றும் கலாசார வளாகத்தை தற்காலிக வைத்தியசாலைகளாக மாற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீனா செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடிவமைக்கப்படும் இந்த மூன்று தற்காலிக வைத்தியசாலைகளில் மொத்தம் 3,400 க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளடக்கப்படுள்ளதாகவும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயின் தலைநகரான வுஹான் மொத்தம் 2,600 படுக்கைகளுடன் ஹூஷென்ஷான் மற்றும் லீஷென்ஷன் ஆகிய இரண்டு தற்காலிக வைத்தியசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதில் 1,000 படுக்கைகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்ட ஹூஷென்ஷன் வைத்தியாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. 1,600 படுக்கைகளுடன் கூடிய லீஷென்ஷன் வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
வுஹானில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் தொகை 6,384 ஆக அதிகரித்துள்ளதுடன், 313 பேர் அங்கு உயிரிழந்தும் உள்ளனர். மொத்தமாக சீனாவில் 20,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 425 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment