மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனக்கோரி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 20, 2020

மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனக்கோரி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கில் தலையெடுக்கும் மத வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சிவசேனை அமைப்பு யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

வலம்புரி பத்திரிக்கையின் மீது ஊர்காவற்றுறை கத்தோலிக்கர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டது ஆபத்தானது என குறிப்பிட்டு யாழ் ஆயர் இல்லத்திற்கு முன்பாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் இந்தப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். 

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் மத வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இங்குள்ள கத்தோலிக்கர்களே மத வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் சைவத் தமிழ் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகையினால் தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாது. 

குறிப்பாக கத்தோலிக்கர்களால் மேற்கொள்ளப்படுகின்ற சைவத் தமிழ் மரபுகளை மாற்றுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இங்குள்ள யாழ் ஆயர் இல்லம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோருகின்றோம். 

சைவத் தமிழ் மரபு அழிக்கப்படுவதைக் கண்டித்தும் மத வன்முறைகள் தலைதூக்க இடமளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் கத்தோலிக்கர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுமே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment