கல்முனை விவகாரத்தில் ஜனாதிபதி தீர்வு ஒன்றினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் - கருணா அம்மான் - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

கல்முனை விவகாரத்தில் ஜனாதிபதி தீர்வு ஒன்றினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் - கருணா அம்மான்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களால் பிரதான கோரிக்கையாக இருந்துவந்த சாய்ந்தமருது மற்றும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தொடர்பான பிச்சினைகளில் சாய்ந்தமருது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று கல்முனை தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். 

திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச அமைப்பாளர் ஆர்.இராஜேஸ்வரன் தலைமையில் நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது சாய்ந்தமருது பிரதேசம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகமும் தரம் உயர்த்தப்பட வேண்டும். இதற்கு மாற்று கருத்துக்கு இடமில்லை. 

அனைத்து தமிழ் மக்களும் இந்த விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால் பாரிய பிரச்சினைகள் உருவாகுவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தீர்வு ஒன்றினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே கல்முனை பிரச்சினையை கவனத்தில் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்நிகழ்வில் கிழக்கு முன்னாள் உறுப்பினர் எஸ்.செல்வராசா கருத்துகள் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திருக்கோவில் நிருபர்

No comments:

Post a Comment