உலகிலேயே ஆகக்குறைந்த நாட்கள் பாடசாலை செல்வது இலங்கை மாணவர்களே - அமைச்சர் டளஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, February 17, 2020

உலகிலேயே ஆகக்குறைந்த நாட்கள் பாடசாலை செல்வது இலங்கை மாணவர்களே - அமைச்சர் டளஸ்

உலகிலேயே ஆகக்குறைந்த நாட்களுக்கு பாடசாலை செல்வது இலங்கை மாணவர்களென்றும் அவர்கள் 50 நாட்களுக்கு மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிப்பதாகவும் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

வருடத்தின் 365 நாட்களில் 200 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் நடைபெறுகின்றன. நாளொன்றுக்கு ஆறு மணித்தியாலங்கள் வீதம் மாணவர்கள் வருடத்துக்கு 1200 மணித்தியாலங்களே பாடசாலைகளில் உள்ளனர்.

இதன்படி அவர்கள் வருடத்துக்கு 50 நாட்களே பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் டளஸ் விளக்கமளித்தார். 

மாத்தறையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 

இலங்கையைப் பொறுத்த வரையில் ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் பரீட்சையை மையப்படுத்தியே பயிற்றுவிக்கப்படுகின்றனர். 

கல்வியில் முன்னணியில் இருக்கும் பின்லாந்து போன்ற நாடுகளில் ஆரம்ப பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் திறமைகள் பரீட்சையிலன்றி செயற்பாடுகள் மூலமாகவே மதிப்பிடப்படுகின்றன.

இவ்வாறானதொரு நிலை நமது நாட்டில் நடைமுறைக்கு வரவேண்டுமென்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment