மணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகும் அபாயநிலை - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2020

மணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகும் அபாயநிலை

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு, தட்டுவன்கொட்டி, கிளாலி ஆகிய இடங்களில் தொடர்கின்ற மணல் அகழ்வு காரணமாக கடல் நீர் உட்புகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேற்படி கிராமங்களில் கடலுக்கு அண்மித்த பகுதியில் தொடர்கின்ற பெருமளவிலான மணல் அகழ்வு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலக ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இது தொடர்பாக பொது அமைப்புகளினால் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், கண்டாவளை பிரதேச செயலாளர் அடங்கிய குழுவினர் கல்லாறுப் பகுதிக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளனர்.

மணல் டிப்பர்கள் கல்லாறுப் பகுதியில் இருந்து பெருமளவு மணலினை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதை அவதானித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறித்த குழுவினரால் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பூநகரியின் கௌதாரி முனையில் மணல் அகழ்வு நடைபெற்றதன் காரணமாக கடல் நீர் உட்புகக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கிளாலி, தட்டுவன்கொட்டி, கல்லாறு போன்ற பகுதிகளில் தொடர்கின்ற மணல் அகழ்வினால் கடல் நீர் உட்புகக் கூடிய அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நிருபர்

No comments:

Post a Comment