சீனாவின் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24,552 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் 3,223 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், 907 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
வுஹானில் ஆரம்பமான கொரோனா வைரஸ் இதுவரை 28 நாடுகளில் பரவியுள்ளது.
1. சீனா : பாதிப்பு - 24,324 பேர், உயிரிழப்பு - 490
2. தாய்லாந்து : பாதிப்பு - 25
3. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 13
4. வியட்நாம் : பாதிப்பு - 10
5. சிங்கப்பூர் : பாதிப்பு - 24
6. இலங்கை : பாதிப்பு - 01
7. ஜப்பான் : பாதிப்பு - 33
8. தென்கொரியா : பாதிப்பு - 18
9. ஹொங்கொங் : பாதிப்பு - 17, இறப்பு - 1
10. ஜேர்மனி : பாதிப்பு - 12
11. தாய்வான் : பாதிப்பு - 11
12. அமெரிக்கா : பாதிப்பு - 11
13. மலேசியா : பாதிப்பு - 10
14. மாக்கோ : பாதிப்பு - 10
15. பிரான்ஸ் : பாதிப்பு - 06
16. டுபாய் : பாதிப்பு - 05
17. கனடா : பாதிப்பு - 05
18. இந்தியா : பாதிப்பு - 03
19. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 02, இறப்பு - 1
20. பிரிட்டன் : பாதிப்பு - 02
21. ரஷ்யா : பாதிப்பு - 02
22. இத்தாலி : பாதிப்பு - 02
23. சுவீடன் : பாதிப்பு - 01
24. பின்லாந்து : பாதிப்பு - 01
25. கம்போடியா : பாதிப்பு - 01
26. நேபாள் : பாதிப்பு - 01
27. பெல்ஜியம் : பாதிப்பு - 01 28. ஸ்பெய்ன் : பாதிப்பு - 01
கொரோனா வைரஸ் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை நிலவரப்படி, கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 427 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 65 பேர் பலியான சம்பவம் சீன மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment