இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும், தெமட்டகொடை - வை.எம்.எம்.ஏ. தேசிய பேரவையின் 70 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டும், வை.எம்.எம்.ஏ. யின் தலைமையக அனுசரணையில், 25 பாடசாலைகளுக்குத் தேவையான மரக்கன்றுகள், மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியில் வழங்கிவைக்கப்பட்டன.
பத்துக்கும் மேற்பட்ட தேசியக் கொடிக்கம்பங்களும் இதன்போது வழங்கப்பட்டன. தேசிய உப தலைவரும், 70 ஆவது ஆண்டுப் பூர்த்தி நிகழ்வுக்கான செயற்திட்ட தவிசாளருமான சஹீத் எம். ரிஸ்மியின் வழிகாட்டலில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஐ.ஏ. காதிர் கான்
No comments:
Post a Comment