தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2020

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்த செந்தில் தொண்டமான்

பண்டாரவளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கோணமுட்டாவ தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக - தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

தோட்டத்தின் வைத்திய அதிகாரியை உடன் இடமாற்றுமாறு வலியுறுத்தியும், காடாகி காணப்படும் இத்தோட்டத்தின் தேயிலை மலையை சுத்தம் செய்து தரும்படியும் வலியுறுத்தி இப்போராட்டத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக சம்பவ இடத்துக்கு சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தோட்ட அதிகாரியை (01) சந்தித்து கலந்துரையாடினர்.

பின்னர் அதிகாரியினால் பெருந்தோட்டத்துறைக்கான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்கி தோட்ட வைத்திய அதிகாரியை இடமாற்றம் செய்வதாகவும், தேயிலை மலைகளை சுத்தம் செய்து தருவதாகவும் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்-

No comments:

Post a Comment