கடமைக்கு திரும்பாத முப்படை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 5, 2020

கடமைக்கு திரும்பாத முப்படை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம் அறிவிப்பு

72ஆவது தேசிய சுதந்திர தினத்துக்கு அமைவாக 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் ஒரு வார கலத்துக்கு பொது மன்னிப்புக் காலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு அமைவாக கடமைக்கு திரும்பாத முப்படை வீரர்களும் சட்டபூர்வமாக கடமையில் இருந்து விலகுவதற்கு அல்லது மீண்டும் சேவையில் இணைவதற்கு பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கவுள்ளது. 

2019ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விடுமுறை பெறாது பணிக்கு திரும்பாத முப்படையினருக்கே இந்தப் பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment