ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னப்பிரிய பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 27ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்னவின் இராஜினாமாவை தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment