சஜித் பொதுத் தேர்தலிலும் படுதோல்வியடைவார் - ரணில் இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளார் - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

சஜித் பொதுத் தேர்தலிலும் படுதோல்வியடைவார் - ரணில் இருந்த நிலைப்பாட்டிலேயே இன்றும் உள்ளார்

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு ஐக்கிய தேசிய கட்சி ஒரு சவால் அல்ல. ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருந்த நிலைப்பாட்டிலேயே அவர் இன்றும் உள்ளார். எனவே சஜித் பிரேமதாச பொதுத் தேர்தலிலும் படுதோல்வியடைவார் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் தோன்றவுள்ள பொது கூட்டணியின் சின்னம் குறித்து எதிர்த் தரப்பில் இன்று பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளன. 

ஒரு தரப்பினர் யானை சின்னத்தையும், பிறிதொரு தரப்பினர் அன்னம் சின்னத்தையும், மூன்றாவது தரப்பினர் இதயம் சின்னத்தையும் உரிமை கோருகின்றார்கள். 

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பதவிகள் தற்போது சிறந்த பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் ஊடாகவே பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad