80 ஆயிரத்தையும் கடந்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை - உயிரிழந்தவர்களின் தொகை 2,701 - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 25, 2020

80 ஆயிரத்தையும் கடந்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை - உயிரிழந்தவர்களின் தொகை 2,701

உலளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது இன்றைய தினம் 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் தொகையும் 2,701 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 9,214 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 27,661 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

கொரோனா தொடர்பில் சீனாவில் திங்களன்று 71 புதிய இறப்புகள் சம்பவித்துள்ளன. இதில் ஹூபே மாகாணத்தில் 68 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளது. இதன் மூலம் சீனாவில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 2,663 ஆக உயர்வடைந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு வெளியே இதுவரை 35 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 36 நாடுகளில் பரவியுள்ளது. 

1. சீனா: பாதிப்பு - 77,659, உயிரிழப்பு - 2,663 
2. தென்கொரியா: பாதிப்பு - 893, உயிரிழப்பு - 09 
3. ஜப்பான்: 159 + 691 (டயமண்ட் பிரின்சஸ்), உயிரிழப்பு - 05 
4. இத்தாலி: பாதிப்பு - 131, உயிரிழப்பு - 07 
5. சிங்கப்பூர்: பாதிப்பு - 90 
6. ஹொங்கொங்: பாதிப்பு - 81 
7. ஈரான்: பாதிப்பு - 61 
8. அமெரிக்கா: பாதிப்பு - 53 
9. தாய்லாந்து: பாதிப்பு - 35 
10. தாய்வான்: பாதிப்பு - 30, உயிரிழப்பு - 01 
11. அவுஸ்திரேலியா: பாதிப்பு - 22 
12. மலேசியா: பாதிப்பு - 22 
13. ஜேர்மன்: பாதிப்பு - 16 
14. வியட்நாம்: பாதிப்பு - 
16 15. பிரிட்டன்: பாதிப்பு - 13 
15. டுபாய்: பாதிப்பு - 13 
16. பிரான்ஸ்: பாதிப்பு - 12, பிரான்ஸ் - 01 
17. கனடா: பாதிப்பு - 11 
18. மாக்கோ: பாதிப்பு - 10 
19. குவைத்: பாதிப்பு - 05 
20. பிலிப்பைன்ஸ்: பாதிப்பு - 03 
21. இந்தியா: பாதிப்பு - 03 
22. ஸ்பெய்ன்: பாதிப்பு - 03 
23. பஹ்ரைன்: பாதிப்பு - 02 
24. இஸ்ரேல்: பாதிப்பு - 02 
25. ஓமான்: பாதிப்பு - 02 
26. ரஷ்யா: பாதிப்பு - 02 
27. ஆப்கானிஸ்தான்: பாதிப்பு - 01 
28. பெல்ஜியம்: பாதிப்பு - 01 
29. கம்போடியா: பாதிப்பு - 01 
30. எகிப்த்: பாதிப்பு - 01 
31. பின்லாந்து: பாதிப்பு - 01 
32. ஈராக்: பாதிப்பு - 01 
33. லெபனான்: பாதிப்பு - 01 
34. நேபாள்: பாதிப்பு - 01 
35. சுவீடன்: பாதிப்பு - 01 
36. இலங்கை: பாதிப்பு - 01 

No comments:

Post a Comment