புயலுக்கு நடுவில் புதிய சாதனை - 5 மணி நேரத்தில் நியூயோர்க்கில் இருந்து லண்டன் சென்ற விமானம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 10, 2020

புயலுக்கு நடுவில் புதிய சாதனை - 5 மணி நேரத்தில் நியூயோர்க்கில் இருந்து லண்டன் சென்ற விமானம்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று, கடுமையாக வீசிய புயல்காற்றுக்கு நடுவே நியூயோர்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்தில் சென்றடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் போயிங்-747 ரக பயணிகள் விமானம், கடந்த சனிக்கிழமையன்று இரவு நியூயோர்க்கில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. 

மணிக்கு 800 மைலுக்கும் அதிகமான வேகத்தில் பயணித்த இந்த விமானம், 4 மணி நேரம் 56 நிமிடங்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து லண்டனை ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்தது. வழக்கமாக நியூயோர்க்கில் இருந்து லண்டன் வருவதற்கு 6 மணி நேரம் 13 நிமிடங்கள் ஆகும். 

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அட்லாண்டிக் பெருங்கடலை 5 மணி நேரத்திற்குள் கடந்தது புதிய சாதனை ஆகும். அதுவும் அதிவேகமாக காற்று வீசிய நிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2018 இல் நோர்வே விமானம் 5 மணி 13 நிமிடங்களில் அட்லாண்டிக் கடலை கடந்ததே சாதனையாக இருந்தது. 

சியரா புயல் பிரிட்டனை நோக்கி வேகமாக சென்றபோது, அதிவேகமாக வீசிய காற்றானது விமானத்தின் வேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

சியரா புயல் பிரிட்டனை தாக்கியபோது அதிவேகமாக வீசிய காற்றால், பல விமானங்கள் தாமதமாகின. சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிராங்பர்ட், ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் 100 க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment