ஒரு வாரத்திற்கு முன்னரே ஈரானில் 50 பேர் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பு - வெளியாகியது புதிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Monday, February 24, 2020

ஒரு வாரத்திற்கு முன்னரே ஈரானில் 50 பேர் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பு - வெளியாகியது புதிய தகவல்

ஈரானின் கோம் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐஎல்என்ஏ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

ஈரானிய நகரத்தினை சேர்ந்த அதிகாரியான அஹமட் பராஹனி பெப்ரவரி 13ம் திகதிக்கு முன்னரே 50 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவித்தார் என ஐஎல்என்ஏ தெரிவித்துள்ளது. 

குறிப்பிட்ட நகரத்தில் 250 பேரிற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

சியாக்களின் மதகற்கை நெறிக்கு பிரபலமான நகராக கோம் காணப்படுவதும் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கற்கைகளிற்காக இந்த நகரத்திற்கு செல்வதும் குறிப்பிடத்தக்கது. 

பெப்ரவரி 19ம் திகதி தனது நாட்டில் முதலாவது கொரோன வைரஸ் உயிரிழப்பு ஏற்பட்டது என ஈரான் அறிவித்திருந்த நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே 50 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவலகள் தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சீனா, தென்கொரியாவை விட பாதிக்கப்பட்டவர்களின் அளவினை கருத்தில் கொள்ளும்போது இறந்தவர்களின் எண்ணிக்கை ஈரானில் அதிகம் என்பதும் முக்கியமானது. 

ஈரானிற்கு விஜயம் மேற்கொண்டவர்கள் வைரஸ் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என ஈரானின் அயல் நாடுகள் அறிவித்துள்ளதுடன் ஈரானுடனான தங்கள் எல்லையை மூடியுள்ளன. 

ஈரானின் மசாட் நகரிற்கு சென்று நாடு திரும்பிய மூவர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என குவைத் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஈரானிலிருந்து தனது பிரஜைகள் 750 பேரை வெளியேற்ற ஆரம்பித்துள்ள குவைத் ஈரானிலிருந்து வந்த மூவரிற்கு நோய்த்தாக்கம் உள்ளது சவுதி அரேபியா குவைத் மற்றும் வேறொரு நாட்டை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. 

ஈரான் இதனை உறுதி செய்துள்ள போதிலும் மாசாட் நகரில் வைரஸ் காரணமாக யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்ற விடயத்தினை வெளியிடவில்லை. தலைநகர் டெஹ்ரான் உட்பட ஐந்து நகரங்களில் வைரஸ் பாதிப்புகளை இனம் கண்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளனது. 

ஈரானிற்கு சென்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை லெபனான் - கனடா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் உறுதி செய்துள்ளன. இதேவேளை வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து ஈரான் பல பகுதிகளில் இரண்டாவது நாளாக பாடசாலைகளை மூடியுள்ளது.

No comments:

Post a Comment