ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புக்கு வட மாகாணத்தில் மாத்திரம் 36,461 விண்ணப்பங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புக்கு வட மாகாணத்தில் மாத்திரம் 36,461 விண்ணப்பங்கள்

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பத்திற்காக வட மாகாணத்தில் மாத்திரம் 36 ஆயிரத்து 461 விண்ணப்பங்கள் (36,461) கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை முழுவதும் ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் விண்ணப்பம் கோரப்படும் நிலையில், பிரதேச செயலாளர் பிரிவிற்கு தலா 350 பேர் என்ற அடிப்படையில. வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் 34 பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ள நிலையில் 11 ஆயிரத்து 900 பேருக்கு நியமனம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது 6 பிரதேச செயலாளர் பிரிவுகளையுடைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,771 பேரும் 15 பிரதேச செயலாளர் பிரிவினையுடைய யாழ்ப்பாணம் மாவட்டத்தி்ல் 18,124 பேரும் , விண்ணப்பித்துள்ளனர்.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 5,806 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 4,354 விண்ணப்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5,406 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதை மாவட்ட செயலகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

(கோப்பாய் நிருபர் - செல்வகுமார்)

No comments:

Post a Comment

Post Bottom Ad