கொரோனா வைரஸ் தாக்கம் 2020 இல் உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் 2020 இல் உலக பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி 2020 இல் பாதிக்கப்படலாம் என சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. 

வைரஸ் காரணமாக 0.1 முதல் 0.2 வரையான வீழ்ச்சியை எதிர்பார்க்கின்றோம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜ்கிவா தெரிவித்துள்ளார். 

எவ்வளவு வேகமாக வைரசினை கட்டுப்படுத்துகின்றோம் என்பதை பொறுத்தே தாக்கத்தின் அளவு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

முன்கூட்டிய முடிவுகளிற்கு வரவேண்டாம் என நான் அனைவருக்கும் ஆலோசனை வழங்குகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னமும் பெருமளவு நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது, பல வகையான சூழல்களிற்கு மத்தியில் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொரோன வைரசினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை தற்போது முழுமையாக கணிப்பிடமுடியாது ஆனால் சுற்றுலாத்துறை போக்குவரத்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜ்கிவா தெரிவித்துள்ளார். 

இந்த வைரஸ் என்ன வகையானது என்பது இன்னமும் தெரியாததால் தற்போதைய நிலையில் எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளது என குறிப்பிட்டார்.

சீனாவால் எவ்வளவு வேகமாக இந்த வைரசினை கட்டுப்படுத்த முடியும் என தெரிவிக்க முடியாது, உலகின் ஏனைய பகுதிகளிற்கு இது பரவுமா என்பதும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வைரசினை விரைவில் கட்டுப்படுத்த முடிந்தால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவது குறைவடையும் அதேவேளை வேகமாக மீண்டும் சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad