மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் 24ம் திகதி - News View

Breaking

Post Top Ad

Tuesday, February 18, 2020

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் 24ம் திகதி

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்படுவதுடன், கடந்தாண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற ஆய்வுகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்படும்.

இத்துடன், இவ்வாண்டுக்கான புதிய திட்ட முன்மொழிவுகளும் இவ்வாண்டிலே ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்களும் ஆராயப்பட்டு அது உரிய முறையில் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இம்மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், திணைக்களத்தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத்தவிசாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளும் கலந்து கொண்டு மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கருத்துக்களை முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad