தமிழர்கள் அனைவரும் தொடர்ந்தும் ஒன்றுபட்டே நிற்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
உதய நகர் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒற்றுமையாக பல செய்திகளை சொல்லியிருக்கிறார்கள் ஆனால் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தொடர்ந்தும் இனவாத மதவாத போக்கோடு வருகின்றமையை காட்டுகிறது தொடர்ந்தும் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டாலே எமது இனத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம்.
தமிழர்களின் பேரம் பேசும் சக்தி ஒரு சக்தியுடன் இருக்க வேண்டும் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைக்கப் படுமானால் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாவதுடன் ஆயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களும் வீணாகும் இதையே பல துண்டுகளாக உடைந்து நிற்பவர்களும் விரும்புகிறார்கள் எனவே மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒன்று பட்டு நிற்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment