சஹ்ரான்வுடன் இணைந்து செயற்பட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

சஹ்ரான்வுடன் இணைந்து செயற்பட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுதாரியான சஹ்ரான்வுடன் இணைந்து செயற்பட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் தலைவர் உதெனி அத்துகோரல இதனை தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

மக்களுக்கும் தற்போது வாழ்க்கை செலவீனம் குறைவடைந்துள்ளது. கடந்த கால அரசாங்கம் கம்பெரலிய செயற்திட்டத்தின் மூலம் இரண்டு வீடுகளுக்கு பாதை அமைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவளித்துள்ளனர். மக்களுக்கு ஒரு அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்கும் முன்னர் அதன் மூலம் எத்தனை பயனாளர்கள் பயனடைய கூடியதாக இருக்கும் என அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ கிராம மக்களின் தேவையை அறிந்து மக்களுக்கான சேவைகளை சிறந்த முறையில் நிறைவேற்ற கூடியவர். புதுவருட தொடக்கத்தில் முன்னைய அரசாங்கம் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் புதுவருட வாழ்த்துக்களை அனுப்பி வைக்கும், ஜனாதிபதி கோத்தாபய அந்த செலவீனங்களையும் குறைத்து நாட்டிற்கு 69 இலட்சம் வரையிலும் மீதப்படுத்தி உள்ளார்.

கடந்த நான்கரை வருடங்களில் இலங்கையில் பல்வேறுபட்ட குற்றச்செயல்கள் இடம்பெற்றிருந்தன ஊழல்கள் பலவும் இடம்பெற்றது, கடந்த அரசாங்க ஆட்சியின்போதே ஏப்ரல் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

குண்டுதாரியான சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்டவர்களை விசாரணை செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தர வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கிறோம்.

நாட்டில் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தததை நிறைவடைய செய்து நாட்டில் அமைதியை நிலவ செய்ததன் பின்னர் கடந்த அரசாங்கத்தின் மூலம் இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றிருப்பது கவலைக்குரிய விடயமாகும். மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து, மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைக்கு தள்ளியது அதே அரசாங்கம் தான்.

மேலும் கிராம சேவக பிரிவின் அபிவிருத்திக்கு முதற்தடவையாக 20 இலட்சம் ரூபா நிதி ஜனாதிபதி கோத்தபாயவின் மூலம் வழங்கப்பட்டிருந்தது. பொதுஜன பெரமுன தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த இந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களுக்கு இதுபோன்று பல செயற்திட்டங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியுடன் குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment