அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்ட உயர்வு இம்மாத சம்பளத்துடன் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 2, 2020

அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்ட உயர்வு இம்மாத சம்பளத்துடன்

அரசாங்க ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சம்பள அதிகரிப்பின் இறுதிக்கட்ட சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் அதிகரித்து வழங்கப்படுமென பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. 

பொது நிருவாக அமைச்சின் 03/2016ஆம் இலக்க சுற்றுநிருபம் மூலம் சகல அரச ஊழியர்களினதும் சம்பளம் 107 சத வீதத்தால் அதிகரிக்கப்பட்டு ஐந்து கட்டங்களாக 2016 வழங்கப்பட்டு வருகிறது. 

இதுவரை நான்கு கட்ட சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுவிட்டன. அதன் இறுதிக் கட்ட சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படுமெனவும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, 2016 முதல் 2019 வரை ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான 2020 ஆம் ஆண்டுக்கான சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியங்களை மாற்றியமைக்குமாறும் பிரதேச செயலாளர்களை பொதுநிருவாக அமைச்சு 35/2019ஆம் இலக்க சற்றுநிருபம் மூலம் கேட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற அரச அலுவலர் தனக்கான முழுமையான சம்பள அதிகரிப்பை 2020 ஜனவரியில் பெறுவார். இந்த சம்பள அதிகரிப்புக்கான ஓய்வூதியத்தை கணக்கிட்டு வழங்குமாறு அமைச்சு கேட்டுள்ளது. 

சாய்ந்தமருது நிருபர்

No comments:

Post a Comment