மக்கள் குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டம் ! - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

மக்கள் குடியிருப்பில் கள்ளுத்தவறணை வேண்டாம் - மக்கள் ஆர்ப்பாட்டம் !

மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கள்ளுத்தவறணையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்றுமாறுகோரி முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை கயட்டையடி மக்களால் இன்றையதினம் (03) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் ஊற்று புளியங்குளம் வீதியில் மாமூலை கயட்டையடி பகுதியில் மிக நீண்ட காலமாக கள்ளுத்தவறணை ஒன்று இயங்கிவருகின்றது . ஆரம்பகாலத்தில் குறித்த கள்ளுத்தவறணை பகுதியில் கிராமங்கள் இல்லாத நிலையில் இந்த கள்ளுத்தவறணை இயங்கி வந்தது.
தற்போது அந்தப்பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் கள்ளுத்தவறணை அமைந்திருப்பதால் பல்வேறுபட்ட குற்றச் செயல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் தலை தூக்கியுள்ளதோடு அருகில் குடியிருப்பவர்கள் குடிகாரர்களால் தினமும் இடைஞ்சல்களுக்கு உள்ளாவதாகவும் பாடசாலை மாணவர்கள், பெண்கள் முதலானவர்கள் இந்த கள்ளுத்தவறணைக்கு குடிக்கவருபவர்களால் பாதிக்கப்படுவதாகவும் இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளுத்தவறணை வாயிலை மூடி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இறுதியில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலையீட்டையடுத்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலருக்குக் கையளிக்கும் விதமாக கிராம அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

விரைவில் இந்த கள்ளுத்தவறணை வேறு இடத்துக்கு மாற்றப்படாது விட்டால் தமது போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment