சப்ரகமுவ மாகாணத்தில் 494 பட்டதாரிகளுக்கு நாளை சனிக்கிழமை (4) ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 2018.06.22ஆம் திகதி சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய 2019.03.31ஆம் திகதி அதற்கான போட்டிப் பரீட்சைகளும் நடைபெற்றன. இதில் தெரிவு செய்யப்பட்ட 494 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவின் ஆலோசனைக்கமைய நியமனம் வழங்கப்பட உள்ளது.
மேற்படி நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத்தெகுதியில் இடம்பெறும் என்றும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
காலத்தை விசேட நிருபர்
No comments:
Post a Comment