சீனாவில் பரவிவரும் புதிய கொரோனா வைரசின் காரணமாக வூஹான் நகரத்தில் தற்பொழுது இருக்கும் இலங்கை மாணவர்கள் சிலர் சேகரித்து வைத்திருந்த உணவு பொருட்கள் தீர்ந்து வருவதினால் இவர்களுக்கான உணவு பொருட்களையும் தேவையான விற்றமின் வகைகளையும் விநியோகிப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதியின் வெளிநாட்டு அலுவல்கள் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொம்பகே தெரிவிக்கையில் வூஹானில் உள்ள பல்கலைக்கழக மற்றும் இவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகின்றது. என்று தெரிவித்த அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் மூலம் இந்த நோய் தமக்கு தொற்றக்கூடும் என்று நினைத்து உணவை பெற்றுக்கொள்வதில் விருப்பமின்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த மாணவர்களுக்கு தேவையாள உணவு மற்றும் விற்றமின்கள் வழங்கப்படுவதுடன் இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சீன அரசாங்க அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கமும், சீனாவில் உள்ள இலங்கை தூதரகமும் தொடர்ச்சியாக பேச்சுவார்தை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment