72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் மரியாதை அணி வகுப்பில் 8,260 பேர் பங்கேற்பு - அமைச்சர் மஹிந்த சமரசிங்க - News View

About Us

About Us

Breaking

Thursday, January 30, 2020

72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் மரியாதை அணி வகுப்பில் 8,260 பேர் பங்கேற்பு - அமைச்சர் மஹிந்த சமரசிங்க

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின வைபவத்துக்காக 250 விசேட பிரமுகர்களும், சுமார் 1000 பொதுமக்களும் கலந்துகொள்ளவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முப்படை பொலிஸார் மற்றும் தேசிய மாணவர் படையணி அடங்கலாக 8,260 பேரைக் கொண்ட மரியாதை ஊர்வலமும் நடைபெறவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 

இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அடங்கலாக சுமார் 2,500 பேர் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 72 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

பெரும் எண்ணிக்கையிலானோரை இங்கு வரவழைத்து அவர்களுக்கான வசதிகளை செய்துகொடுப்பதில் சிரமங்கள் உண்டு. பொதுமக்களுக்கும் பங்கு கொள்வதற்கு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மரியாதை அணிவகுப்பு தொடர்பாக அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் 4,325 படையினர் கலந்து கொள்கின்றனர். கடற்படையில் 860 பேரும், இலங்கை விமானப் படையில் 815 பேரும், இலங்கை பொலிஸார் சார்பில் 1382 பேரும், சிவில் படைகளில் 515 பேரும் கலந்துகொள்ளவுள்ளனர். தேசிய மாணவர் படையணியில் 315 பேரும் கலந்துகொள்ள இருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment