ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2020

ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஏற்க போவதில்லை - எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை

(இராஜதுரை ஹஷான்) 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களில் 2015 ஆம் ஆண்டில் இருந்து ராஜபக்ஷர்கள் இருந்த நிலைப்பாட்டில் தற்போது எவ்வித மாற்றங்களும் கிடையாது எனத் தெரிவித்த அரசாங்க பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, சர்வதேசத்தில் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான தீர்மானங்களுக்கு ஒருபோதும் அங்கிகாரம் வழங்க முடியாது என்றும் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இடம் பெற்றது. இக்கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை கொண்டு வந்து அதனூடாக இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்குக்கூறலை ஊக்குவித்தல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இணையனுசரனை வழங்கிய நாடுகள் குறிப்பிட்டன. 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 41 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை இலங்கை தொடர்பிலும், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் புலம் பெயர் அமைப்புக்கள் பல அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாகவும் அறிய முடிந்தள்ளது. 

நல்லாட்சி அரசாங்கம் அடிப்படை காரணிகள் ஏதுமின்றி 2015 ஆம் ஆண்டு 30(1) பிரேரணைக்கு இணையனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தமை முதல் தவறாகும். இத்தீர்மானத்திற்கு அப்போதை வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த மங்கள சமரவீ, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமலும், அனுமதி பெறாமலும் தான்தோன்றித்தனமான தீர்மானங்களையே மேற்கொண்டார். 

நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள் வெற்றி பெறுவதற்கும், அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கும் ஒருபோதும் இடமளிக்கவோ, ஆதரவு வழங்கவோ முடியாது என 2015 ஆம் ஆண்டில் இருந்து எதிர்க்கட்சியினர் என்ற அடிப்படையில் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தோம். இன்று ஆளும் தரப்பினராக செயற்படும் போது எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

No comments:

Post a Comment