1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும், தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பான சட்டத்தை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாதத்தை தடுக்கும், தற்காலிக ஏற்பாடுகள் தொடர்பான சட்டத்தை இரத்து செய்வதற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்குமான புதிய விதிகளை பிறப்பிப்பதற்கான எதிர்பார்ப்புடன், பயங்கரவாதத்தை தடுக்கும் திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கதாக இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சர்வதேச தொடர்புகள் குறித்த துறைசார் மதிப்பீட்டு குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திருத்த சட்ட மூலத்தில் உள்ளடங்கியுள்ள சில விதிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரினால் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை கவனத்தில் கொண்டு அச்சட்ட மூலத்தை வாபஸ் பெறுவதற்காக, வெளியுறவுகள், திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனகக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment