பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்த பிரியந்த லியனகே எதிர்க்கட்சி பக்கம் தாவினார்! - News View

About Us

About Us

Breaking

Friday, January 3, 2020

பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்த பிரியந்த லியனகே எதிர்க்கட்சி பக்கம் தாவினார்!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புதிய பாராளுமன்ற உறுப்பினராக இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி பக்கம் தாவி ஐக்கிய தேசிய கட்சியின் ஆசனங்களில் அமர்ந்து கொண்டார்.

இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடிய போது சபாநாயகர் அறிவிப்பின் பின்னர் காலஞ்சென்ற இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் ஆசனத்திற்காக பதவியேற்ற வருண பிரியந்த லியனகே சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதன் பின்னர் ஆளும் கட்சி பக்கத்தில் அவருக்காக ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்படி பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் அவர் தனக்காக ஆளும் கட்சி பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பின்னர் சிறிது நிமிடங்கள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த அவர் அங்கிருந்து சபைக்கு குறுக்காக சென்று எதிர்க்கட்சி பக்கத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கைலாகு கொடுத்து பின்னர் எதிர்க்கட்சி பக்கம் சென்ற இவரை ஐக்கிய தேசிய கட்சியினர் மேசையில் தட்டியும் அவருக்கு கைலாகு கொடுத்தும் வரவேற்றனர். அதன் பின்னர் அவர் தனது கன்னியுரையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment