ரசீதுகளுடன் நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் விடுத்தார் அமைச்சர் லக்‌ஷ்மன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 1, 2020

ரசீதுகளுடன் நிரூபிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் விடுத்தார் அமைச்சர் லக்‌ஷ்மன்

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்ட பின்னர் அவர் அலரி மாளிகைக்குத் தளபாடங்கள் கொள்வனவு செய்ய ஐந்து சதம் கூட செலவிடவில்லை. அவ்வாறு செலவிட்டிருந்தால் ரசீதுகளை முன்வைக்குமாறு இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன சவால் விட்டுள்ளார்.

300 மில்லியன் ரூபாய் செலவில் அலரி மாளிகைக்குத் தளாபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஐ.தே.க எம்.பிக்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர், இவ்வாறு பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கூறினார்.

ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், கதிரைகள் வாங்குவதற்கு 5 இலட்சம் செலவானதாக கருதினால் 300 மில்லியனுக்குத் தளபாடங்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை எப்படி நம்ப முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவி ஏற்பு வைபவம் மற்றும் கால்டன் முன்பள்ளி என்பவற்றில் பங்கேற்பதற்காக ராஜபக்ஷவினர் பல ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியதாக வேறு குற்றம் சாட்டியுள்ளனர்.

எந்த ஒரு ஜனாதிபதி பயணம் செய்தாலும் இரண்டு ஹெலிகொப்டர்கள் செல்லும். ஒன்றில் ஜனாதிபதியும் மற்றதில் பாதுகாப்பு அதிகாரிகளும் செல்வார்கள். கால்டன் வைபவத்திற்குத் தனது உத்தியோகபூர்வ வாகனத்திலேயே பிரதமர் சென்றார்.

50-60 அமைச்சர்கள் வாகனத்தில் செல்வதை விட, வைடுவெல் விமானத்தில் சென்றால் பெருமளவு பணம் எஞ்சும். இது எல்லா ஆட்சிகளிலும் நடந்துள்ளது.

குற்றம்சாட்ட எதுவும் இல்லாததால் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள். ஜனாதிபதி வீண் விரயங்களைக் குறைத்து அந்தப் பணத்தை வேறு விடயங்களில் ஈடுபடுத்துவதாகக் காண்பிக்க எதிரணி முயல்கிறது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment